
சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்ற இரு நண்பர்களில் ஒருவர், அதிவேகமாக பைக் ஓட்டியதில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 17 வயதுடைய சிறுவன் தனது 18 வயது நண்பனுடன் பைக்கில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த போது, நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே வந்த இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த நண்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.