
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இருவருக்கும் இடையேயான பேச்சு வார்த்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
அவர் அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லிக்கு சென்றார். இதனால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்னுடைய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது. அரசியலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை என கூறியுள்ளார்.