உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம் ராஜ்கபூர் பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில்  மின்விளக்கு பழுதானது. அப்போது லைன் மேன் மின்சாரத்தை துண்டிக்காமல் எரியாத மின் விளக்கை சரி செய்ய முயன்றார். அவர் மின் கம்பிகளுக்கு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் மின் கம்பத்திலேயே உடல் கருகி லைன் மேன் உயிரிழந்தார்.

இதனை பார்த்து பதறிப்போன பொதுமக்கள் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் போலீசார் லைன் மேனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரீத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.