புனேவில் உள்ள சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியது. இதற்கு முன்பு போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது மாணவிகள் தங்கும் விடுதியில் மது பொருட்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து ஒரு மாணவி புகார் அளிப்பதற்காக சென்றதாக தெரிகிறது.

ஆனால் விடுதியில் வார்டன் அந்த மாணவி கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அந்த மாணவியின் நிறத்தை வைத்து கேலி செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் விடுதியில் நடக்கும் குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி மாணவி பதிவாளர் மற்றும் துணை வேந்தரிடம் பலமுறை முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது சம்பந்தப்பட்ட மாணவிகள் இறுதி ஆண்டு கல்வியில் இருப்பதால் அவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என நிர்வாகம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.