நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகளாவிய வெற்றியை பெற்ற ‘ஸ்க்விட் கேம்’ தொடரில் “ஓ இல் நம்” எனும் கதாபாத்திரத்தில் நடித்த தென் கொரியாவின் புகழ்பெற்ற நடிகர் ஓ யியோங்-சூவுக்கு  பாலியல் தொல்லை வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

80 வயதான அவர், ஒரு பெண்ணை இரு முறை கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் உரையாற்றிய ஓ யியோங்-சூ, “இந்த வயதில் நீதிமன்றத்தில் நிற்பது எனக்கு வெட்கமாக உள்ளது. என் சொற்கள் அல்லது செயல்கள் தவறாக இருந்தால் அதன் விளைவுகளை ஏற்கத் தயார்.

ஆனால், நான் யாரையும் தாக்கியதாக நம்பவில்லை. என் 80 வருட வாழ்க்கை ஒரு நொடியில் சிதைந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.