
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மஜிதா பகுதியில், கள்ளச்சாராயம் குடித்ததால் 15 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பங்கலி, படல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அமிர்தசரஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, விஷம் கலந்த மதுபானத்தை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரே நேரத்தில் வாங்கியது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான சாஹிப் சிங், பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், குர்ஜந்த் சிங் மற்றும் நிந்தர் கவுர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷமதுவில் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களை ஆன்லைனில் வாங்கி, உள்ளூர் சப்ளையர்கள் மதுபானமாக தயாரித்து கூலித்தொழிலாளர்களிடம் விற்பனை செய்திருப்பதாக அமிர்தசரஸ் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.