
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய நந்தினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த கடந்த 14-ஆம் தேதி நந்தினி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஸ்டவ் அடுப்பில் இருந்து சாதத்தை வடிக்கும் போது திடீரென கை தவறியது. அப்போது கொதிக்கும் வடிகஞ்சி நந்தினி உடல் மீது கொட்டி விட்டது.
இதனால் படுகாயம் அடைந்த நந்தினியை பெற்றோர் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஒரு வாரமாக நந்தினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.