சஞ்சய் பங்கர், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர். அவரின் மகன் ஆர்யன் சமீபத்தில் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார். தன்னை பெண்ணாக உணர்ந்ததால் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.

ஆர்யன், சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டாலும், இது பற்றிய தகவல் வெளியில் தெரியவில்லை. தற்போது வெளிவந்துள்ள வீடியோவில், ஆணாக இருந்த போது இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, தனது வாழ்க்கையில் நடந்த மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது ஆர்யன் தன் பெயரை அனயா என மாற்றியுள்ளார். தனது உணர்வுகளுக்கு தக்கவாறு பெண்ணாக மாறியதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள அவர், தனது இந்த பயணத்தை இணையவழியில் வெளியிட்டுள்ளதால், உலகம் முழுவதும் உள்ளவர்கள் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.