
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக விஜய் கொடைக்கானலுக்கு புறப்பட்டார். விஜய் மதுரை விமான நிலையம் வந்து இறங்கியதும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக தொண்டர்கள் யாரும் தன்னை பின் தொடர வேண்டாம். ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் வரவேண்டாம் என விஜய் அறிவுறுத்தினார். ஆனாலும் தொண்டர்கள் விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரை பின்தொடர்ந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் விஜயை வரவேற்க கூடியிருந்த தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
பயணிகளுக்கு தொந்தரவு அளிப்பது, சட்டவிரோதமாக கூடுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் மதுரை மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மற்றும் கல்லணை ஆகிய இருவரும் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.