தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, முளைத்து மூன்று இலை கூட விடவில்லை அதற்குள் அதிமுகவை பற்றி விமர்சிப்பதா.? அதிமுக போட்ட பிச்சையில்தான் இன்று பாஜகவுக்கு சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.

அதன்பிறகு பாஜகவுக்கு சொந்த காலும் கிடையாது சொந்த செல்வாக்கும் கிடையாது. இப்படி எதுவுமே இல்லாமல் பாஜக எங்களை பார்த்து பேசுவது வினோதமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு தனியாக நின்று தேர்தலை சந்தித்து பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு தெரியும் என்று கூறினார். மேலும் இதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.