தஞ்சாவூரில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக மத்திய அரசை பார்த்து பயப்படுகிறது. திமுக தங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ள ராஜதந்திரம் என்ற பெயரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும். தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்ததற்கு போதைப்பொருள் கலாச்சாரம் தான் காரணம். குறிப்பாக மாணவர்களையும் இளைஞர்களையும் குறி வைத்து போதை பொருள் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் அதை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.

அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என அனைவரும் முயற்சி செய்வது இயற்கை தான். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு தடையாக இருக்கும் வரை அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது. அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி 2026 தேர்தலோடு மூடிவிடுவார்.  இரட்டை இலை சின்னம் இருப்பதால் தான் அங்குள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பொறுமையாக இருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலோடு அதிமுக கட்சியை எடப்பாடி பழனிச்சாமி மூடி விடுவார் என டிடிவி தினகரன் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.