
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் முதல் மாநாட்டினை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டமும் நடைபெற்றது. இப்போது திமுக அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சமீபத்தில் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது திமுக மற்றும் பாஜகவை விஜய் சரமாரியாக விமர்சித்தார். தமிழக வெற்றி கழகம் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்துள்ளார்.
அவர் தமிழக அரசியல் வட்டாரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்றும் திராவிட கட்சிகளுக்கும் சவாலாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர் ஒருவர் தற்போது x பக்கத்தில் கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 23 சதவீதம் வரை ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தேர்தலுக்கு முன்பே கருத்துக்கணிப்பு விஜய்க்கு சாதகமாக இருப்பதாகவும் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்றும் பதிவிட்டுள்ளார். அதாவது சாணக்கியா கருத்துக்கணிப்பில் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு 23 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளதாக பதிவிட்டுள்ளனர். மேலும் தலைவர் விஜய் இன்னும் களத்திற்கு வராத நிலையில் அவர் களத்திற்கு வந்து எதிரிகளைப் பந்தாடும்போது அனைவரையும் வீழ்த்தி முதன்மை சக்தியாக வருவார் என்பதில் ஐயமில்லை என்று பதிவிட்டுள்ளனர்.
தலைவர் இன்னும் முழுமையாக களத்திற்கு வராமலேயே இந்த 23% கருத்து கணிப்பில் கிடைத்திருக்கிறது.
முழுமையாக களத்திற்கு வந்து எதிரிகளை பந்தாடும் போது அனைவரையும் வீழ்த்தி முதன்மை சக்தியாக வருவார் என்பதில் ஐயமில்லை .@tvkvijayhq @BussyAnand @GuRuThalaiva @pughazh58 pic.twitter.com/JQuq1wS3Xb
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) December 9, 2024