
சீனாவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் மக்களுக்கு மட்டுமின்றி கார்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பல கார்கள் வீங்கிய நிலையில் இருப்பதை காட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விசித்திரமான நிகழ்வுக்கு காரணம் கார்களின் தரம் குறைபாடு அல்ல. மாறாக, சீனாவில் நிலவும் அதிக வெப்பமே இதற்கு காரணம். கார்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் பாலிமர் படலங்கள் அதிக வெப்பத்தைத் தாங்காமல் விரிந்துள்ளன.
இந்த நிகழ்வு காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. சீனாவில் பல இடங்களில் வெப்பநிலை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. மேலும், சீனாவின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களும் ஏற்பட்டுள்ளன.இந்த நிகழ்வுகள் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. அதை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.