
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதாக நான் பேசியது இஸ்லாமியர்களை நோக்கி என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஏழ்மையான இந்து குடும்பங்களிலும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு சரியான கல்வியை தரமுடிவதில்லை. நான் அவ்வாறு பேசும்போது இந்துக்கள் என்றோ, இஸ்லாமியர்கள் என்றோ குறிப்பிடவில்லை என மோடி கூறியுள்ளார்.