ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார். இதைத் தீர்க்க, தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற வேண்டும் என்றார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது, அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டுவரும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார். தென் மாநிலங்களில், குறிப்பாக ஆந்திராவில், கருவுறுதல் விகிதம் குறைவடைந்துள்ளதால், விவசாயம் உள்ளிட்ட முக்கியமான தொழில்களில் பணியாளர்களின் பற்றாக்குறை ஏற்படலாம் என்றார். இந்நிலையில், பல்வேறு வளர்ச்சி முயற்சிகளும் பாதிக்கப்படலாம் என்பதையும் அவர் உரையாடலில் குறிப்பிட்டார்.