
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 3ஆம் தேதி அதிகாலை 1.55 மணியளவில் இரு பெண்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் ஒரு பெண்ணிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் நடந்து சென்ற நிலையில் திடீரென அந்த வாலிபர் ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
बेंगलुरु में एक महिला के साथ सड़क पर यौन उत्पीड़न हुआ और यह घटना सीसीटीवी में रिकॉर्ड हो गई। जांच शुरू हो गई है।#Bengaluru #Video #CCTV #CCTVFootage #assault pic.twitter.com/662tFAvF6X
— Ashish rai (@journorai) April 6, 2025
பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்டே அங்கிருந்து சென்ற நிலையில் அவருடைய தோழி சமாதானம் செய்தபடியே சென்றார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண் இதுவரையில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ ஆதாரங்களை வைத்து குற்றவாளியை தேடி வருகிறார்கள்.