
திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி சுற்றுலா பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் முன் சட்டென குறுக்கிட்ட கார்மீது மோதாமல் இருக்க ஒட்டுநர் முயன்றபோது விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.