
பொதுவாக பணியிடங்களில் மேலதிகாரிகளின் அடுத்ததால் ஊழியர்கள் சங்கடத்திற்கு உள்ளவர்கள். இருப்பினும் வேலை நிமித்தமாக அவர்களை எதுவும் சொல்ல முடியாது. இந்நிலையில் மேலதிகாரிகளை திட்டுவதற்காகவே தற்போது அமெரிக்காவில் ஒரு புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஆள் வைத்து ஒருவரை அடிப்பது போன்று தற்போது ஆள் வைத்து அவர்களை திட்டும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புதிய திட்டத்தை அமெரிக்காவை சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியனான காலிமார் வைட் தொடங்கியுள்ளார்.
இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 2,80,000 பாலோவர்கள் இருக்கிறார்கள். அவர் தொடங்கிய விசித்திர நிறுவனத்தின் பெயர் அலுவலக புகார்கள் மற்றும் பிரச்சினைகள் ஏஜென்சி. (OCDA office complaints and Disputes agency) . இந்த நிறுவனத்தில் புகார் கொடுக்கும்போது அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசுவார்கள் அல்லது நேரில் சென்று அதிகாரியை சந்தித்து பேசுவார்கள். மேலும் இப்படிப்பட்ட பிரச்சனை தொடர்பான வீடியோவை அவர்கள் தங்களுடைய youtube சேனல் பக்கத்தில் போட்ட நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.