இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல். இவர் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவரை பஞ்சாப் அணியின் நிர்வாகம் சமீபத்தில் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவருக்கு திருமணம் ஆகி தனஸ்ரீ என்ற மனைவி இருக்கிறார். இவர் ஒரு மருத்துவர் மற்றும் நடன ஆசிரியர். தற்போது இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் இருவரும் அன்பாலோ செய்துள்ள நிலையில் சாஹல் தன் மனைவியுடன் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். அதே சமயத்தில் தனஸ்ரீ அன்பாலோ மட்டும் செய்துள்ள நிலையில் புகைப்படங்களை நீக்கவில்லை. மேலும் இவர்கள் இருவருக்கும் 2020 ஆம் ஆண்டு திருமணம்  நடைபெற்ற நிலையில் தற்போது பிரிவதை இருவரும் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.