மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியார் பகுதியை சேர்ந்தவர்கள் ஹேமந்த் சர்மா – துர்காவதி தம்பதி. ஹேமந்த் சர்மாவின் இரண்டாவது மனைவிதான் துர்காவதி. கடந்த சில காலமாக ஷர்மா கடுமையான நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்கு காரணம் துர்காவதி தான் என்று அவர் நினைத்துள்ளார். காரணம் துர்காவதி அதிகமாக செலவு செய்துள்ளார். இதனால் அவர் மீது கோபம் கொண்ட சர்மா தனது மனைவி என்றும் பாராமல் துர்காவதியை கொலை செய்ய திட்டமிட்டார்.

தனது நண்பர்களிடம் இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து மனைவி துர்காவதியை கொலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய கூறியுள்ளார். அதன்படி தனது மனைவியை விபத்தில் இறந்தது போன்று கொலையும் செய்துவிட்டார்.

ஆனால் விபத்தை ஏற்படுத்தியது கனரக வாகனம் என்று சர்மா கூறியதால் வேறு யாரும் அத்தகைய கனரக வாகனத்தை பார்க்கவில்லை என்று கூறியதாலும் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அடுத்து சர்மாவிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.