கடந்த ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான போட்டியில் , சிஎஸ்கேவின் 183 ரன்கள் வெற்றிபெறாத சேஸிங்கில், துஷார் தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரில் பந்தை தவறவிட்டதால், கெய்க்வாட்டின் முழங்கையில் காயம் ஏற்பட்டது . இதனால் நாளை  சேப்பாக்கத்தில் டெல்லி கேபிடல்ஸ்  அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்   அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது சந்தேகமே. கெய்க்வாட்   குணமடையவில்லை என்றால் எம்எஸ் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே வின் பயிற்சியாளர் மைக் ஹசீமிடம், “நாளைய போட்டியில் ருத்ராஜ்  விளையாடா விட்டால் அணியை யார் வழி நடத்துவார் ?என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஸ்டெம்பிற்கு பின்னால் ஒரு இளம் வீரர் ஒருவர் இருக்கிறார். அவர் நன்றாக வழி நடத்துவார். ஆனால் இது இன்னும் உறுதியாக வில்லை. ஒருவேளை அவர் ஒரு நல்ல வேலையைச் செய்ய முடியும். என்று கூறியுள்ளார்.