
இந்த சீசனில் இருந்து கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் அணிகள் சேர்க்கப்பட்டது. 2022 ஆம் வருடம் குஜராத் அணியின் ஹர்திக் பாண்டியா தலைமையில் கோப்பை கைப்பற்றியது. லக்னோ மூன்றாவது இடத்தை பிடித்தது. 2023-ம் வருடம் குஜராத் இரண்டாவது இடத்தில், லக்னோ மூன்றாவது இடத்தை பிடித்தது. கடந்த வருடம் லக்னோ ஏழாவது இடத்தை பிடித்தது. ஆனாலும் கடந்த மூன்று வருடங்களில் அதிக வெற்றி பெற்ற முதல் ஐந்து அணிகளில் லக்னோ அணி நான்காவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் லக்னோ அணியின் கேப்டனாக களமிறங்கிய அனைவருமே தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளர்கள். கடந்த 2022 ஆம் வருடம் கேப்டனாக இருந்த கே.எல் ராகுல் டக் அவுட் ஆனார். 2023 ஆம் வருடம் குர்ணல் பாண்டியாவும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். அந்த வகையில் இந்த சீசனில் கேப்டனாக உள்ள ரிஷப் பண்டும் டக் அவுட் ஆகி உள்ளார். இதன் மூலமாக லக்னோ அணி கேப்டன்கள் டக்உடக் அவுட் ஆகி வருவது புது சாதனையாக உள்ளது.