மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் ரகுமான் லஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது சகோதரருக்கு திருமணம் ஆனது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் தனியாக வசித்த தனது அண்ணி மீது ரகுமானுக்கு ஆசை வந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று ரகுமான் தனது அண்ணியுடன் உல்லாசமாக இருக்க நினைத்தார்.

அதற்கு அவரது அண்ணி மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த ரகுமான் தனது அண்ணியை கொடூரமாக கொலை செய்து தலையை துண்டித்து உடலை மூன்று பாகங்களாக வெட்டி வீசினார். இதுகுறித்து அறிந்த போலீசார் அந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரகுமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.