தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேசியது எங்கள் கட்சியின் தேசிய தலைமை தான். தேசிய தலைமை தான் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அன்றைய சூழலில் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்தான் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எனவே ஆட்சியில் பங்கு என்பதை அவர்களே இணைந்து பேசிக்கொள்வார்கள்.

பெண்கள் பற்றி இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும். கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் திமுக டெபாசிட் இழக்கும் என்று கூறினார்.

அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர் அண்ணாமலை புயலாக இருந்தால் நான் தென்றலாக இருப்பேன். நன்றி என்ற மூன்று வார்த்தை மிகவும் முக்கியமானது அதற்கு நான் கடைசிவரை நன்றியோடு இருப்பேன். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். மேலும் மிகப்பெரிய ஊழல் கட்சி என்றால் அது காங்கிரஸ்தான் என்று கூறினார்.