
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருடைய இறுதி சடங்கு வாடிகன் நகரில் நடைபெற்ற நிலையில் பின்னர் உடல் நலடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் மறைவு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த போப் பிரான்சிஸ் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில் தற்போது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் போப் பிரான்சிஸ் போன்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொண்ட போது அடுத்த போப் பிரான்சிஸ் யார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டொனால்ட் டிரம்ப் நான் தான் அடுத்த போப் என்று கூறினார்.
இந்த நிலையில் அவர் போப் பிரான்சிஸ் போன்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அதிபராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அவர் போப் பிரான்சிஸ் போன்று புகைப்படம் வெளியிட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.