
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு நாய்கள் பாதுகாப்பு நிலையம் உள்ளது. இங்கு ஏராளமான நாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு நாய் பராமரிப்பாளராக பணிபுரியும் ஒருவரை பிட்புல் நாய் மிகவும் கொடூரமான முறையில் கடித்து தாக்கியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகை நாய்கள் பல சமயங்களில் உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதேபோன்று அந்த பாதுகாப்பு நிலையத்தில் வேலை பார்த்தநபரின் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்திய நிலையில் அவர் கத்தி கூச்சலிட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றினர். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.