சமூக வலைதளங்களில் தற்போது ஒரு கோழியின் ஆச்சரியமான பறத்தல் குறித்து ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு வெள்ளை கோழி, ஒரு சிறிய பாலம் போன்ற அமைப்பில் நின்று, திடீரென வானில் பறந்து ஒரு ஆற்றைக் கடந்து வெற்றிகரமாக மறுபுறம் இறங்குகிறது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி மற்றும் வியப்பில் மிதந்துள்ளனர். பொதுவாக கோழிகள் அதிக தூரம் பறக்காது என்று கருதப்படும் நிலையில், இந்த கோழியின் திறமை நம்மை எல்லோரையும் ஏமாற்றிவிட்டதா? என்ற கேள்வியை எழுப்புகிறது!

இந்த வீடியோ 4.7 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளதுடன், 43,000-க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. பலரும் கோழியின் பறக்கும் திறனை நம்ப முடியவில்லை என்கிறார்கள். ஒரு பயனர், “கோழி நின்றுவிடாமல் இவ்வளவு தூரம் பறக்க முடியும்? இது சாத்தியமில்லை!” என ஆச்சரியம் தெரிவித்தார். மற்றொருவர், “நான் சந்தித்த 90% மக்களைவிட இது புத்திசாலி!” என கலாய்த்தார். மேலும், ஒரு பயனர் “கோழிகள் இவ்வளவு காலம் பறக்க முடியும்னு மறைக்க வெச்சுட்டாங்களா? நம்மை ஏமாற்றிட்டாங்களே!” என சிரிப்புடன் கருத்து தெரிவித்தார். இந்த வீடியோ தொடர்ந்து சமூக வலைதளங்களில் விவாதத்திற்குரியதாக மாறி, கோழிகள் உண்மையில் எவ்வளவு தூரம் பறக்க முடியும்? என்ற ஆராய்ச்சிக்கே வழிவகுத்துள்ளது.