தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. இந்த படத்திற்கு பிறகு ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இறுக பற்றி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்காத நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது உடல் எடையை குறைத்து முடி வளர்த்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார். உண்மையில் இது அவர் தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அந்த வீடியோ இருக்கிறது. இவர் பிக் பாஸ் சீசனிலும் நடித்துள்ளார். இவர் ஏதேனும் பட சூட்டிங்குக்காக அப்படி முடி வளர்த்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறாரா என்ற விவரம் தெரியவில்லை. மேலும் அவர் இதுவரை என்ன ஆனார் என்று கேட்டிருந்த ரசிகர்களுக்கு இந்த வீடியோ ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Shriram Natarajan (@shri_blueticked)