நாட்டில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகளின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் ORMAX மீடியா வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் பட்டியலை அந்த நிறுவனம் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நவம்பர் மாதத்தின் ஃபேமஸ் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் பிரபாஸ் இருக்கிறார். அதன்பிறகு இரண்டாம் இடத்தில் நடிகர் விஜயும், மூன்றாம் இடத்தில் நடிகர் அல்லு அர்ஜுனும், நான்காம் இடத்தில் நடிகர் ஷாருக்கானும், ஐந்தாம் இடத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆரும், ஆறாம் இடத்தில் நடிகர் அஜித்குமாரும், ஏழாம் இடத்தில் நடிகர் மகேஷ் பாபுவும், எட்டாம் இடத்தில் நடிகர் சூர்யாவும், ஒன்பதாம் இடத்தில் நடிகர் ராம்சரனும், பத்தாம் இடத்தில் நடிகர் அக்ஷய்குமார் இருக்கிறார்கள்.

மேலும் இதே போன்று நவம்பர் மாதத்திற்கான பேமஸ் நடிகைகள் பட்டியலில் நடிகை சமந்தா முதலிடத்தில் இருக்கிறார். அதன்பிறகு இரண்டாம் இடத்தில் நடிகை ஆலியா பட்டும், மூன்றாம் இடத்தில் நடிகை நயன்தாராவும், நான்காம் இடத்தில் நடிகை சாய் பல்லவியும், ஐந்தாம் இடத்தில் நடிகை தீபிகா படுகோனேவும், ஆறாம் இடத்தில் நடிகை திரிஷாவும், ஏழாம் இடத்தில் நடிகை காஜல் அகர்வாலும், எட்டாம் இடத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும், ஒன்பதாம் இடத்தில் நடிகை சாரதா கபூரும், பத்தாம் இடத்தில் நடிகை கத்ரீனா கைஃபூம் இருக்கிறார்கள்.