
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்தவகையில் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கான மானிய கோரிக்கை அறிவிப்புகளையும் வெளியிட்டர். அதன் படி சென்னையில் இந்த வருடம் இ -ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன் போட்டியானது நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதில் இளைஞர்களுக்கு இடையே இ-ஸ்போர்ட்ஸ் பிரபலம் அடைந்து வருவதால் சென்னையில் இந்த வருடம் இ-ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன் போட்டி நடத்தப்படும் என்றும், 2028 ஆம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டில் இ-ஸ்போர்ட்ஸ் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் நடைபெற உள்ள உலக சாம்பியன் போட்டி இந்தியாவின் முக்கியமான இ-ஸ்போர்ட்ஸ் நிகழ்வாக இருக்கும் என்று கூறியுள்ளார்.