அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, ரத்தத்தை உறியும் அட்டைப்பூச்சி போல வருமான வரி என்ற பெயரில் பொதுமக்களின் ரத்தத்தை உறிகிறது மத்திய அரசு. 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை என்று சொல்லிவிட்டு 13 லட்சம் வருமானம் ஈடுபவருக்கு கூடுதல் ஒரு லட்சம் மட்டும் வரி போடாமல் 13 லட்சம் ரூபாய்க்கும் வரி போடுவது என்ன நியாயம் என்று கேட்டுள்ளார். முன்னதாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது ஜெயக்குமார், மத்திய பட்ஜெட் பீகார் மாநிலத்திற்கான பட்ஜெட் போன்று தான் இருக்கிறது.

அங்கு தேர்தல் வர இருப்பதால் அதனை குறி வைத்து பட்ஜெட் வெளியிட்டுள்ளனர். தேர்தல் ஆதாயத்திற்கான திட்டங்கள் மட்டும் தான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது  ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் இரு மாநிலங்களுக்கு தவிர பிற மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று கூறியிருந்தார்.