அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று குஜராத் மாநிலம் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து மூன்றாவது போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 435 ரன்கள் எடுத்து அயர்லாந்து அணிக்கு 436 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அயர்லாந்து மகளிர் அணி 31.4 ஓவர்களிலேயே அணைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.