பீகார் மாநிலம் முசாபர்பூரில் சமூக மரியாதையும், குடும்பத் தொடர்புகளையும் புறக்கணித்து, ஐந்து குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னைவிட வயதில் சிறிய, பள்ளி மாணவரான மைனர் காதலனை திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது முசாபர்பூரைச் சேர்ந்த ரூபி என்ற பெண், 2015 ஆம் ஆண்டு போராஹா கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்தார். அவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவர் டெல்லியில் தொழிலாளியாக வேலை செய்து வந்த நிலையில், ரூபி அவரது சொந்த கிராமமான விஸ்டா பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த நேரத்தில், ரூபி ஒரு 16 வயது பள்ளி மாணவனுடன் பழகத் தொடங்கினார். இருவரும் ஒரு கண்காட்சியில் சந்தித்து, மொபைல் வழியாக உரையாடல்களால் நெருக்கமடைந்தனர். இந்த உறவு மெதுவாக காதலாக மாறியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், ரூபி அந்த சிறுவனை ‘சகோதரன்’ என சொல்லி, தன் வீட்டில் தங்கவைத்தார். ஆனால் பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமண விவரம் தெரியவந்ததும், குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ரூபி தனது காதலனுடன் இரு பெண் பிள்ளைகளை தன்னுடன் அழைத்து கொண்டு ஓடிவிட்டார். அதே நேரத்தில், அவரது கணவர் மூன்று ஆண் பிள்ளைகளை தன்னுடன் வைத்துக் கொண்டார். இந்த விவகாரம் தற்போது கிராம மக்கள் மத்தியில் முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, அவுராய் காவல் நிலையத்தினர் தற்போது எதுவும் எழுத்துப்பூர்வமான புகார் பெறவில்லை எனவும், புகார் வந்தவுடன் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், காதலன் மைனர் என்பதால், சட்ட ரீதியாக இந்த திருமணம் செல்லாததாகவும், அந்த மாணவனின் பெற்றோர் இதற்கு எதிராக மனு அளித்தால் இது குற்றமாக மாறும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் சமூக மரபுகளுக்கும், குடும்ப ஒழுக்கத்திற்கும் எதிராக இருப்பதற்காக பலரும் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் மிகவும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.