சிரியா நாட்டிலிருந்து 20 லட்சம் பேர் லெபனான் நாட்டிற்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர். கடுமையான பொருளாதார சிக்கலில் லெபனான் நாடு இருந்த போதிலும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் வேலை வாய்ப்பு தொடர்பாக அகதிகளுக்கும் லெபனான் நாட்டு மக்களுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இதனால் குற்ற செயல்களை செய்ய அகதிகள் தொடங்கி விட்டதாகவும் இது ராணுவ வீரர்களுக்கு சிரமத்தை கொடுப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.