
சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்தவகையில் தாக்க வந்த முதலையை அசால்ட்டாக ஒருவர் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புளோரிடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடுகள் உள்ள குடியிருப்பு பகுதியில் முதலை ஒன்று நுழைந்துள்ளது.
இதனை பார்த்த மக்கள் அலறி அடித்து துடித்தனர். அப்போது தகவல் அறிந்து வந்த இளைஞர் ஒருவர், அருகில் இருந்த குப்பைத் தொட்டியை கொண்டு முதலையை அசால்ட்டாக பிடித்துள்ளார். பின்னர் அருகில் உள்ள குளத்தில் அந்த முதலை விடப்பட்டது. முதலையை தைரியமாக பிடித்த அவரை குடியிருப்பு வாசிகள் பாராட்டினர்.
This Florida Man has won the internet for the Month of September pic.twitter.com/PB9dIMDkOS
— K (@kerethp) September 29, 2021