தமிழ்நாட்டில் கடலை மிட்டாய் போன்று வடமாநிலங்களில் ரேவ்டி என்ற மிட்டாய் மிகவும் பிரபலமானது. இந்த மிட்டாயை ஒரு தொழிலாளி தயாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த மிட்டாயை தயாரிக்கும் தொழிலாளர்கள் தரையில் போட்டு மாவை பிசைவதோடு சுவரில் அதனை அடித்து பிசைகிறார்கள்.

அந்த தொழிலாளிகள் கையுறை கூட அணியாமல் வெறும் தரையிலும் சுவற்றிலும் போட்டு அந்த மிட்டையை தயாரிக்கிறார்கள். ஒரு அடிப்படை சுகாதாரமற்ற முறையில் இந்த மிட்டாய் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. மேலும் இதனை பார்த்த பலரும் இனி இந்த மிட்டாயை எப்படி சாப்பிட முடியும். மிட்டாயை பார்க்கும்போதெல்லாம் இதுதானே ஞாபகத்திற்கு வரும் என்று கோபத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.