மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூண்டு  போலியானது என்றும், அது சிமெண்டால் செய்யப்பட்டிருந்தது என்றும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், ஒரு நபர் பூண்டை தோலுரிக்க  முயற்சிக்கும் போது, அதனுள் சிமெண்ட் இருப்பது தெரியவருகிறது. இதனை பார்த்து அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

தற்போது பூண்டின் விலை அதிகரித்துள்ளதால், இது போன்ற போலி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது போன்ற சம்பவங்கள் நுகர்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.