தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில் கடந்த 1-ம் தேதி இந்த படம் வெளியானது. இந்த படம் ஆக்சன் மற்றும் காதல் கலந்த கதையில் அமைந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படம் வெளியாகி 5 நாட்கள் ஆகும் நிலையில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்துள்ளதாக தற்போது படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படம் அதிகாரப்பூர்வமாக உலக அளவில் 104 கோடி வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.