இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் லக்னோ பேட்டிங் செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிஷப் அதிரடியாக விளையாடி 118 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய இருக்கிறது.

“>

 

மேலும் ரிஷப் ஆரம்பத்திலிருந்து சொதப்பி வந்த நிலையில் 27 கோடிக்கு வாங்கி அவர் ஒர்த்தே இல்லை என்ற விமர்சனங்கள் குவிந்த நிலையில், இதற்கு தற்போது  சரியான பதிலடி கொடுக்கும் விதமாக கடைசி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதம் குவித்துள்ளார். மேலும் அவர் சதம் அடித்த மகிழ்ச்சியில் மைதானத்தில் குட்டிகரணமும் அடித்தார். இந்த வீடியோ தற்போது x பக்கத்தில் மிகவும் டிரெண்டாகி வரும் நிலையில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.