
இந்தியாவில் நடந்த ஒரு திருமண நிகழ்வின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், மணமகளின் குடும்பத்தினர் மாப்பிள்ளை பக்கம் கொடுத்த பரிசுகளின் பட்டியல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 3 கிலோ வெள்ளி, ஒரு பெட்ரோல் பங்க் மற்றும் 210 பீகா நிலம் ஆகியவை ₹15.65 கோடி மதிப்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டதிலிருந்து 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து பரவலான கவனத்தை பெற்றுள்ளது.
இந்த வீடியோ வைரலானதோடு, சமூக ஊடகங்களில் பலரும் இதற்கு எதிர்வினை தெரிவித்துள்ளனர். சிலர் இது ‘பாத்’ என்ற பாரம்பரிய நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும், இது வதந்தியாக இருக்கலாம் என்றும் கூறினர். ஆனால், பெரும்பாலான நெட்டிசன்கள் இந்த அளவுக்கு அளவுகடந்த பரிசுகள் வழங்குவது வரதட்சணை என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
இதே நேரத்தில், பலர் இந்தத் தொகையை வைத்து அந்தப் பெண் தனியாக வாழலாம், உலகம் சுற்றலாம், தொழில் தொடங்கலாம் என்று கூறி, திருமணத்தில் பெண்கள் குடும்பத்திற்கு ஏற்படும் பொருளாதார சுமையைப் பற்றியும் கேள்விகள் எழுப்பியுள்ளனர்.