
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவருடைய 69 ஆவது படத்தை பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கௌதம் மேனன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். கேவி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
கிட்டதட்ட 400 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் திரையரங்க உரிமையை செவன் ஸ்கீரின்ஸ் நிறுவனம் 100 கோடிக்கு கைப்பற்றி உள்ளது . படத்தின் உரிமையை கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டிபோட்டு வரும் நிலையில் பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 121 கோடிக்கு படத்தின் டிஜிட்டல் உரிமை கைப்பற்றப்பட்டுள்ளது.