பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். கடந்த 27-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜயின் பேச்சு பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி விஜயின் சொத்து மதிப்பு பற்றி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். விஜய்யின் சொத்து மதிப்பு 600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. நீலாங்கரையின் மேல் தட்டு சுற்றுப்புறத்தில் இருக்கும் கேசுவரினா டிரைவில் ஆடம்பரமான கடற்கரை மாளிகை அமைந்துள்ளது.

இது நவீன கட்டிடக்கலை ஆகும். அதன் மதிப்பு 80 கோடி இருக்கும். விஜயின் ஆண்டு வருமானம் 100 முதல் 120 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உள்ளார். பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது. இது மட்டுமில்லாமல் திருவள்ளூர், திருப்போரூர், திருமழிசை, வண்டலூர் இடங்களில் விஜய்க்கு சொத்துக்கள் இருக்கிறது. அதன் மதிப்பு 100 கோடி ரூபாய் ஆகும். இது போக பல விலை உயர்ந்த சொகுசு கார்களையும் விஜய் வைத்துள்ளார். சொத்து மதிப்பு குறித்த சரியான தகவல் தெரியவில்லை. அதிகாரப்பூர்வ தகவல் வருகிற 2026 ஆம் தேர்தலில் சமர்ப்பிக்கும் வேட்பு மனுவில் தான் தெரியவரும் என பேச்சுக்கள் அடிபடுகிறது.