
உகண்டாவில் உள்ள முக்ஜியா கிராமத்தில் முசா ஹசாயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 12 மனைவிகள், 102 குழந்தைகள், 578 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். உலக அளவில் மக்கள் தொகை பல நாடுகளில் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில் இவர் இவ்வளவு பெரிய குடும்பத்துடன் வாழ்வது ஆச்சரியமாக இருக்கிறது. இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் முதல் திருமணம் செய்த நிலையில் அதன் பிறகு அடுத்தடுத்து 12 திருமணம் வரை செய்துள்ளார்.
ஆனால் இவருடைய குடும்பம் பெரிய குடும்பமாக இருப்பதால் அவருக்கு குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லை. இதன் காரணமாக குழந்தைகள் சில வீடுகளில் வேலை செய்து அதில் சாப்பிடுகிறார்கள். முதலில் திருமணம் செய்வது நகைச்சுவையாக இருந்தாலும் தற்போது குடும்பத்தையும் கவனித்துக் கொள்வது சிரமமாக இருப்பதால் அதை நினைத்து வருந்துவதாக அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக அவருடைய 2 மனைவிகள் பிரிந்து சென்று விட்டனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram