
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு விசாலை என்ற பகுதியில் நடைபெறும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அந்த இடத்தில் கட்சி நினைவாக 100 அடி உயர கொடிக்கம்பம் ஒன்று நடப்பட உள்ளது. முதலில் மாநாட்டுக்கு வரும் விஜய் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றிய பிறகு அரங்கத்திற்குள் நுழைவார்.
இந்நிலையில் இந்த கொடி கம்பம் குறித்து தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நடிகர் விஜய் கொடியேற்றும் நிலையில் அடுத்த 5 வருடங்களுக்கு அந்த இடத்தில் கொடி பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிலத்தின் உரிமையாளரான விவசாயி மணி என்பவருடன் 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளனராம். மேலும் இதன் காரணமாக அடுத்த 5 வருடங்களுக்கு அந்த கொடி கம்பத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றக்கூடாது. இந்த மாநாடு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் விஜயின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் இதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.