அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைபயண நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வரும் பிப்.27இல் தமிழ்நாடு வருகிறார். இதையடுத்து மார்ச் 4இல் மீண்டும் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சார்பில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில், பாஜக கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.