இந்தியாவின் வரலாற்று வெற்றியை சந்திரயான் 3 பதிவு செய்துள்ளது. நேற்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் கிடைத்த வெற்றி. நிலவிற்கு மனிதனை அனுப்புவது தான் அடுத்த கட்டம். அதனைப் போலவே சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.