
உலகம் முழுவதும் ஐடி துறையில் சமீபகாலமாகவே வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்தில் மட்டும் தினம் தினம் சுமார் 3000 ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து ஐபிஎம் நிறுவனமும் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்லது.
அந்நிறுவனம் மொத்தம் 3900 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்போவதாக தெரிவித்துள்ளது. ஆண்டு வருமான இலக்கு வீழ்ச்சியை சந்தித்து வருவதால் இந்த பணி நீக்கம் நடைபெறுவதாக ஐபிஎம் கூறியுள்ளது. மேலும் இந்த 3900 ஊழியர்களும் மொத்த ஊழியர்களில் வெறும் 1.5%தான் என தெரிவித்துள்ளது. இப்படி ஒவ்வொரு நிறுவனமும் அடுத்தடுத்து பணி நீக்கம் அறிவித்து வருவதால் ஐ.டி ஊழியர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.