
நேற்று அண்ணாமலை ரபேல் வாட்சின் விலையை வெளியிட்டார். அந்த பில்லில் வாட்ச் இன் விலை ஜிஎஸ்டி யோடு சேர்த்து 3,46,530 என்று பதிவாகி இருந்தது. ஆனால் அண்ணாமலை என்னுடைய வாட்சின் உண்மையான ஓனர் கோவை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் தான். அவரை எனக்கு இரண்டு வருடங்களாக தெரியும். இந்த வாட்சை அவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளேன்.
மேலும் என்னுடைய வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர், அண்ணாமலையை மறைமுகமாக தாக்கியுள்ளார். லட்ச ரூபாயில் அடுத்தவன் காசில் வாழ்பவனை விட ஆயிரம் ரூபாய் சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தன், தலைமைக்கு தகுதியானவன் என கூறியுள்ளார்.