சமூக ஊடகங்களில் புகழ்பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் இட்டுக்கொள்கிறார்கள். அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, ஒரு இளைஞர் நாகப்பாம்பை முத்தமிடும் வீடியோ.

இந்த வீடியோவில், சாலையின் நடுவே நாகப்பாம்பு அமர்ந்திருக்கும் நிலையில், அந்த இளைஞர் பயமே இல்லாமல் அருகில் சென்று பாம்பின் மீது சாய்ந்து முத்தமிடுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by snake_sohail_8055__ (@snake_sohail_8055___)

இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ snake_sohail_8055__ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து, ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து வருகின்றனர்.

பலரும் இந்த செயலை கண்டித்து, “ஒரு நாகப்பாம்பு உங்களை முத்தமிட்டால், நீங்கள் யாரையும் முத்தமிட முடியாது” என்ற விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். மற்றொரு பயனர், “சாலையில் இப்படி ரீல்ஸ் எடுப்பது தவறு” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.