
சென்னையில் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார்பந்தயம், மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. அதாவது கடந்த டிசம்பர் 9, 10ம் தேதிகளில் திட்டமிடப்பட்ட பந்தயம், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருப்பதால் சென்னை அண்ணா சாலையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது.